அஜித் இந்த சம்பளத்துக்கு தான் தகுதியானவர், பிரபல பத்திரிகையாளர் கடுமையான தாக்கு
அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்து வந்தவர். ஆனால், இவர் தமிழகம் தாண்டி தன் மார்கெட்டை பெரிய அளவிற்கு பெரிதாக்கவில்லை.
இதனால் விஜய் அளவிற்கு இவரால் சம்பளம் பெற முடியவில்லை. இதன் காரணமாக இவர் கேட்கும் சம்பளத்திற்கு எந்த தயாரிப்பாளர்களும் வராத நிலையில் அவரே தயாரிப்பாளர் ஆகிவிட்டார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

அதோடு விஜய் அளவிற்கு அஜித்திற்கும் சம்பளம் வேண்டும் என்பதால் தான் அவர் இப்படி கேட்டு வருகிறார்.
அவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்து படம் எடுத்தால் கண்டிப்பாக அந்த தயாரிப்பாளருக்கு டேபுள் லாஸ் தான் வரும், தற்போது உள்ள மதிப்புபடி அஜித்தின் சம்பளம் ரூ. 65 கோடி கொடுத்தால் மட்டுமே தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்கும் என அஜித்தை அந்த பத்திரிகையாளர் கடுமையாக தாக்கியுள்ளார், இவை அஜித் ரசிகர்களிடம் கடுமையான கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.