முடி உதிர்ந்து வயதான தோற்றத்தில் நடிகர் பிரபாஸ்.. பாகுபலி ஹீரோக்கு இந்த நிலையா?

Actors Prabhas Viral Photos
By Bhavya Jul 20, 2025 07:30 AM GMT
Report

பிரபாஸ்

பாகுபலி படத்திற்கு பின் பிரபாஸ் இந்திய சினிமா கொண்டாடும் நாயகனாக வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியான சலார், கல்கி 2898 ஏடி படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ராஜா சாப். இயக்குநர் மாருதி இயக்கியுள்ள இப்படத்தை People Media Factory நிறுவனம் தயாரித்துள்ளனர்.

முதல் முறையாக ஹாரர் கதைக்களத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் இணைந்து மாளவிகா மோகனன், நிதி அகர்வால், சஞ்சய் தத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

முடி உதிர்ந்து வயதான தோற்றத்தில் நடிகர் பிரபாஸ்.. பாகுபலி ஹீரோக்கு இந்த நிலையா? | Prabhas A I Photo Goes Viral

என்ன ஆனது? 

இந்நிலையில், பிரபாஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தலையில் முடி குறைவாக சொட்டை விழுந்தது போல் காட்சியளிக்கிறார். நெட்டிசன்கள் இதனை கலாய்த்து வருகின்றனர். இப்படம் ஒரு ஏ.ஐ புகைப்படம் என தெரிய வந்துள்ளது. 

முடி உதிர்ந்து வயதான தோற்றத்தில் நடிகர் பிரபாஸ்.. பாகுபலி ஹீரோக்கு இந்த நிலையா? | Prabhas A I Photo Goes Viral