இருந்த கொஞ்சநெஞ்ச பேரையும் கெடுத்துட்டாங்க! கேஜிஎஃப் இயக்குனரின் காலில் பிரபாஸ்..
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்திற்கு பிறகு பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான ராதே ஷ்யாம் படத்தில் நடித்தார். மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது இப்படம். இதனால் தன்னுடைய சம்பளத்தினை தயாரிப்பாளருக்கு பாதியை கொடுத்துவிட்டார்.
மிகவும் அட்செட்டில் இருக்கும் பிரபாஸ் பிரபல இயக்குனருக்கு தூதுவிட்டுள்ளார். ஏற்கனவே மிகப்பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் பிரஷாந்த் நீல் தான். கேஜிஎஃப் 2 இயக்குனர் தான் தனக்கு இருக்கும் ஒரே ஆயுதம் என்று அவருக்கு கால் செய்து புலம்பியுள்ளார் பிரபாஸ்.
கேஜிஎஃப் கொடுத்து வரும் மிகப்பெரிய ஹிட்டால் தனக்கும் இப்படியான கதை வேண்டும் என்று கூறியதால் சலார் என்ற படத்தினை பிரபாஸிற்காக இறக்கியுள்ளார் பிரசாந்த் நீல். தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கவுள்ளனர்.
பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸுடன், ஜெகபதி பாபு, சுருதி ஹாசன், பிரித்விராஜ் போன்ற நட்சத்திரங்கள் நடிக்க கேஜிஎஃப் படத்தினை ஹம்பில் ஃபில்ம்ஸ் தயாரிப்பாளர் தான் தயாரிக்கவுள்ளார்.
ரவி பஸ்ரூர் தான் இப்படத்திற்கும் இசையமைக்கவுள்ளார். இப்படியொரு வாய்ப்பால் கொடுத்த நஷ்டத்தை ஈடுகட்ட, இந்த கூட்டணியை மட்டுமே நம்பி இருக்கிறாராம் பிரபாஸ்.