ஒரு பொம்மை படத்துக்கு 500 கோடி பட்ஜெட்.. பிரபாஸ்-க்கு மட்டும் இத்தனை கோடி சம்பளம்..

Gossip Today Prabhas
By Edward Oct 05, 2022 03:00 PM GMT
Report

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி வெற்றியை தொடர்ந்து பல கோடி பட்ஜெட் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

பாகுபலி

பாகுபலி படம் பல ஆயிரம் கோடி வசூலை கொடுத்ததால் பிரபாஸின் மார்க்கெட் அதிகரித்தது. அதனால் பிரம்மாண்ட படங்களை எடுக்க அவரை தேடி இயக்குனர்கள் படையெடுக்கிறார்கள் அப்படி பாகுபலி இரண்டாம் பாகத்திற்கு பிறகு ராதே ஷ்யாம் படத்தில் நடித்தார்.

அப்படம் சுமார் 100 கோடிக்கும் மேல் நஷ்டத்தை சந்தித்து. இதனால் ஒருசில பங்கினை பிரபாஸ் திருப்பு கொடுத்திருந்தார். இந்த தோல்வியை அடுத்து 3டி தொழில் நுட்பத்துடன் ராமாயணக்கதையை மையப்படுத்தி ஆதி புருஷ் என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஒரு பொம்மை படத்துக்கு 500 கோடி பட்ஜெட்.. பிரபாஸ்-க்கு மட்டும் இத்தனை கோடி சம்பளம்.. | Prabhas Paid 100 Crore For Adipurush

பிரபாஸ் 100 கோடி

இயக்குனர் ஓம் ரவுட் இயக்கத்தில் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. 3டி அமைப்பில் படுமோசமான விமர்சனத்தை ஆதிபுருஷ் டீசர் பெற்று வருகிறது.

இதற்கு ரஜினிகாந்தின் கோச்சடையான் படமே பரவாயில்லை என்று பலர் கிண்டல் செய்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்திற்காக நடிகர் பிரபாஸ் 100 கோடி அளவில் சம்பளமாக பெற்றுள்ளாராம். இப்படத்தின் டீசரால் பிரபாஸின் ஒட்டுமொத்த கேரியரும் குளோஸ் என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.