பிரபு தேவாவின் பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா? இதோ
Prabhu Deva
Actors
Tamil Actors
By Dhiviyarajan
நடிகர், நடன ஆசிரியர், இயக்குனர் எனப் பன்முகங்களை கொண்டவர் தான் பிரபு தேவா. இவர் கடந்த 1995 -ம் ரமலத் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில தனிப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபு தேவா முதுகுவலிக்காகச் சிகிச்சைக்குச் சென்ற இடத்தில் மருத்துவர் ஹிமானி சிங் உடன் அறிமுகமாகி நாளடைவில் இருவரும் காதலராக மாறினார்கள். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
பிரபுதேவா, ஹிமானி சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பிரபு தேவாவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ புகைப்படங்கள்.