வேண்டாம்னு சொல்லியும் விஜய்யுடன் ஆட பிரபுதேவாவை வற்புறுத்திய நடிகர்கள்..
பிரபு தேவா
நடன இயக்குநராக ஆரம்பித்து நடிகராகவும் இயக்குநராகவும் திகழ்ந்து மிகப்பெரிய இடத்தை இந்திய சினிமாவில் பிடித்தவர் தான் பிரபு தேவா. நடிகர் விஜய்யை வைத்து கடந்த 2007ல் பிரபுதேவா இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் படமாக அமைந்தது தான் போக்கிரி படம். இந்த தெம்போடு வில்லு படத்தினை விஜய்யை வைத்து இயக்கி தோல்வியை கண்டார் பிரபு தேவா.

படத்தின் கதையை தாண்டி மணி ஷர்மாவில் இசை படத்துக்கு புதுமையாக அமைந்தது மட்டுமின்றி விஜய் ரசிகர்களை தியேட்டரில் அமர விடாமல் ஆடவைத்தது.
அதுவும் ஓபனிங் பாடலான ஆடுங்கடா என்னை சுத்தி பாடல் விஜய் ரசிகர்களுக்கு ஸ்பெஷலாகவும் இருந்தது. இப்பாடலில் விஜய்யுடன் பிரபு தேவாவும் இணைந்து ஆடியிருப்பார். ஆனால் முதலில் இப்பாடலில் விஜய்யுடன் ஆடம் பிரபு தேவா மறுத்துள்ளார்.

அவருடன் தோன்ற வேண்டாம்
பிரபு தேவாவுடன் எப்படியாவது நடனமாடிவிட வேண்டும் என்று விஜய்க்கு ஆசையாம். அதை அவரிடம் நேரடியாக சொல்லாமல் வையாப்புரியிடம் சொல்லியிருக்கிறார் விஜய். மாஸ்டருடன் வையாபுரி கொஞ்சம் நெருக்கம் என்பதால் அவரும் ஸ்ரீமனும் முதலில் சொல்லியிருக்கிறார்கள்.

அதற்கு பிரபுதேவாவோ, ம்ஹும் வேண்டாம், பாடல் நடனத்தில் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்வோம், ஆனால் நான் அவருடன் தோன்ற வேண்டாம் என்று மறுத்துள்ளார்.
இருந்தாலும் விடாமல் பிரபுதேவாவை இருவரும் நச்சரித்துக்கொண்டே இருந்ததால் பின் அவரும் ஒத்துக்கொண்டு ஆடியிருக்கிறார். இதை வையாபுரி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.