இதுக்கு மட்டும் இத்தனை லட்சமா!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபுதேவா..
தமிழ் சினிமாவில் 1990ல் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ரம்பம்பம் என்ற பாடலுக்கு நடன கலைஞராக அறிமுகமாகி அடுத்தடுத்த தமிழ் படங்களில் பணியாற்றி பிரபலமானவர் நடிகர் பிரபு தேவா.
அதன்பின் 1994ல் நடிப்பில் கவனம் செலுத்தி இந்து, காதலன் போன்ற படங்கள் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார். தற்போது இந்தியா முழுவதும் பிரபலமாகி இந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என்ற பெயரோடு புகழப்பட்டு வருகிறார்.
தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் பிரபுதேவா, விஜய்யின் 68வது படத்திலும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பிரபுதேவாவின் ஷூ-வின் மதிப்பு 1 லட்சம் என்று கூறப்படுவது உண்மையா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பிரபுதேவா, என்னிடம் ஒரேவொரு ஷூ மட்டும் தான் இருந்ததாகவும் அதை தான் டான்ஸ் ஷோ, கல்யாண நிகழ்ச்சிகளுக்கு போட்டு செல்வேன் என்றும் தெரிவித்தார்.

ஃபுல் போதையில், முற்றிப்போய் டான்ஸ் ஆடி நீ என்ன கண்ணகி வீட்டு.. திரிஷாவை வெளுத்து வாங்கிய பயில்வான்..
ஷூட்டிங்கில் அங்கு கொடுக்கப்படும் ஷூ-வை தான் அணிந்து வேலை செய்வதாகவும் கூறினார். அப்போது நான் வைத்திருந்த அந்த ஒரு ஷூ-வின் மதிப்பு 200 ரூபாய் இருக்கும் என்று ஓப்பனாக தெரிவித்துள்ளார்.