நயன்தாரா எப்படி இருப்பாங்க தெரியுமா? அப்படி கிடையாது!! பிரபுதேவா சொன்ன வார்த்தை..
நயன்தாரா
நடிகை நயன்தாரா தற்போது தென்னிந்திய திரைப்படங்களை தாண்டி வட இந்திய படங்களில் நடிக்க ஆரம்பித்து மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றார். நயன் தாராவின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் கிளாமர் காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார்.
அதன்பின் சிம்பு, பிரபுதேவா என இருவருடன் சில காலம் காதலில் இருந்து பின் பிரிந்துவிட்டார். இதன்பின் சினிமாவில் இருந்து விலக நினைத்த நயன் தாரா, அடுத்தடுத்த படங்களில் நடித்து மிகப்பெரிய உயரத்தை பிடித்தார். தற்போது தன் காதல் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
பிரபுதேவா
இந்நிலையில் நயன் தாரா குறித்து பிரபுதேவா வில்லு பட சமயத்தில் அளித்த பேட்டியொன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்த பேட்டியில், பொதுவாக ஒரு ஹீரோயின் ஒரு படத்தில் நடித்து முடித்தப்பின் அந்த படத்தை மறந்துவிடுவார்.
ஆனால் நயன் அப்படி இல்லை. படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸான பின்பும் தன்னுடைய படம் என நினைத்து ஒரு ஹீரோ, இயக்குநர் எவ்வளவு சிரத்தை எடுத்துக்கொள்வோமோ அதேபோல் அவரும் இருப்பார், அவ்வளவு சின்சியராக இருப்பார் என்று பிரபுதேவா பகிர்ந்துள்ளார்.