காதல் லீலையில் கமலுக்கே டஃப் கொடுத்த நடிகர் பிரபு!! அதுவும் இத்தனை நடிகைகளா?

Kamal Haasan Prabhu Ambika Nadhiya Kushboo
By Edward Apr 05, 2024 06:30 AM GMT
Report

80, 90-களில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் நடிகர் கமல் ஹாசன் மீது பல நடிகைகள் நெருக்கமாகவும் காதல் கிசுக்கிசுக்களில் சிக்கியும் வந்தனர். இரு நடிகைகளை காதலித்து திருமணம் செய்து விவாகரத்தையும் செய்துவிட்டார். அதன்பின் எக்கசக்க நடிகைகளுடன் காதல் மற்றும் லிவ்விங் வாழ்க்கையை வாழ்ந்தும் வந்தார்.

காதல் லீலையில் கமலுக்கே டஃப் கொடுத்த நடிகர் பிரபு!! அதுவும் இத்தனை நடிகைகளா? | Prabhu Love Sripriya Ambika Kushboo Revathi Kanaka

அப்படி காதல் மன்னனாக அப்போதில் இருந்தே கொடிக்கட்டி பறந்த கமலுக்கே டஃப் கொடுக்கும் வகையில் நடிகர் பிரபுவின் லீலைகள் அமைந்திருக்கிறது. 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த பிரபு சில நடிகைகளிடம் வெளிப்படையான காதலில் இருந்து வந்தார். அப்படி யார் யாருடன் பிரபு கிசுகிசுக்கப்பட்டார் என்பதை பார்ப்போம்.

காதல் லீலையில் கமலுக்கே டஃப் கொடுத்த நடிகர் பிரபு!! அதுவும் இத்தனை நடிகைகளா? | Prabhu Love Sripriya Ambika Kushboo Revathi Kanaka

குஷ்பூ

முதலில் இருப்பது நடிகை குஷ்பூ. வருஷம் 16, வெற்றி விழா, கிழக்கு வாசல், சின்னத்தம்பி, மன்னன், சிங்காரவேலன், நாட்டாமை, கருப்பு நிலா உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக பிரபுவுடன் நடித்து வந்தார். அப்போது இருவரும் காதலித்ததாகவும் திருமணம் வரை சென்று அதன்பின் கைகூடாமல் போனதாகவும் கூறப்பட்டது.

ஸ்ரீபிரியா

நடிகை ஸ்ரீபிரியாவுடன் பல படங்களில் நடித்த பிரபு, அவரின் அழகில் ஈர்க்கப்பட்டார். ஆனால் குடும்ப சூழ்நிலையால் அந்த காதலையும் கழட்டிவிட்டிருக்கிறார்.

காதல் லீலையில் கமலுக்கே டஃப் கொடுத்த நடிகர் பிரபு!! அதுவும் இத்தனை நடிகைகளா? | Prabhu Love Sripriya Ambika Kushboo Revathi Kanaka

அம்பிகா

200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபுவுடன் 7 படங்களுக்கு மேல் ஜோடியாக நடித்தவர் நடிகை அம்பிகா. அவருக்கு பிடித்தமான நடிகையாக அம்பிகா மாறியதால், பிரபு காதலித்து கல்யாணம் வரை போகாமல் பாதியிலேயே அந்த காதலைமுடித்துக்கொண்டார். அம்பிகா பிரபுவின் அப்பா நடிகர் திலகம் சிவாஜியுடனும் நடித்திருக்கிறார்.

காதல் லீலையில் கமலுக்கே டஃப் கொடுத்த நடிகர் பிரபு!! அதுவும் இத்தனை நடிகைகளா? | Prabhu Love Sripriya Ambika Kushboo Revathi Kanaka

நதியா

பல படங்களில் நடித்து வந்த நடிகை நதியாவையும் விட்டுவைக்கவில்லையாம். ஜோடியாக நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்ததால் நதியா மீது ஈர்ப்பு ஏற்பட்டு அதுவும் சரியாக அமையாமல் போனதாம்.

காதல் லீலையில் கமலுக்கே டஃப் கொடுத்த நடிகர் பிரபு!! அதுவும் இத்தனை நடிகைகளா? | Prabhu Love Sripriya Ambika Kushboo Revathi Kanaka

கனகா

நடிகை தேவிகாவின் மகளான கனகா 4 படங்களில் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்போது கனகாவின் கண்ணழகில் ஈர்க்கப்பட்ட புரபு அவரே கதியாகவும் இருந்து வந்தார். அதன்பின் அவரையும் பிரிந்துவிட்ட வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் பிரபு.