காதல் மயக்கத்தில் இருந்து அஜித் வேண்டாம்-னு ஒதுக்கிய படம்.. தூக்கி எறிந்த பிரபுதேவா?
இயக்குனர் வசந்த் இயக்கத்தில் விஜய், சூர்யா நடிப்பில் 1997ல் வெளியான படம் நேருக்கு நேர். இப்படத்தில் வசந்திடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றி பிரபலமானார் ஜி மாரிமுத்து. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் அஜித், சூர்யா பற்றிய பல விசயங்களை கூறியிருக்கிறார்.

அதில் நேருக்கு நேர் படத்தில் நடிகர் சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் அஜித் பெயர் தான் வசந்த் சார் கூறியதாகவும், நடிகை ஹீராவுடன் காதலில் இருந்து சில மன உளைச்சளில் இருக்கும் போது அஜித் சில நாட்கள் நடித்து அதை வேண்டாம் என்று ஒதுக்கியதாகவும் கூறினார்.
அதன்பின் அப்படத்தில் விஜய், அஜித் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்த வசந்த் வேறு யாரையாவது பார்க்கலாம் என்று என்னிடம் கூறினார். அப்போது நடிகர் பிரசாந்திடம் கேட்டதற்கு, நான் டூயல் ரோலில் நடித்து வருவதால் வேண்டாம் என்று கூறிவிட்டார்.

அதன்பின் டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவிடம் கேட்டதற்கு, ஒரு ஹீரோ நடித்து வேண்டாம் என்று ஒதுக்கிய ஒரு படத்தில் நான் ரீப்-பிளேஸ்பெண்ட் ஆவது எனக்கு பிடிக்காது என்று கூறிவிட்டார் என மாரிமுத்து கூறியுள்ளார்.
அதன்பின் தான் சிவக்குமார் மகன் சரவணன் (சூர்யா) நடிக்க வசந்த் கேட்டார். அப்போது சிவக்குமாருக்கு இரு மகன்கள் இருப்பது தெரியும், ஆனால் அவர்களை பார்க்கவில்லை. பின் சிவக்குமார் மகனை கமிட் செய்து, அவருக்கு பெயரை மாற்றினார் வசந்த்.
மணிரத்னம் இப்படத்தின் தயாரிப்பாளர் என்பதால் தளபதி படத்தில் ரஜினி சார் பெயர் சூர்யாவாக இருந்ததால் அப்படியே சரவணன் என்பதை சூர்யா என்று மாற்றினார்கள் என்று தெரிவித்துள்ளார்.