ஒரே படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியான 7 பிரபல நடிகைகள்! போட்டோவால் கடுப்பான ரசிகர்கள்..

Prabu deva Bagheera
By Jeeva Oct 08, 2021 07:30 AM GMT
Report

நடிகர் பிரபு தேவா பாலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படத்தை இயக்கி படுதோல்வி அடைந்த காரணத்தினால், தற்போது அவர் மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளார்.

அதன்படி தற்போது அவர் நடிப்பில் இயக்குனர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பஹிரா.

இப்படத்தின் டீசர் முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது பஹிரா படத்தின் ட்ரைலர் லான்ச் நிகழ்ச்சி நடந்துள்ளது.

இதில் இப்படத்தின் படக்குழு அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

அதில் பிரபு தேவாவுடன் சோனியா அகர்வால், சாக்ஷி , காயத்ரி, ஜனனி, சஞ்சிதா, அமிரா உள்ளிட்டோர் புகைப்படம் எடுத்துள்ளனர். மேலும் இவர்களுடன் நடிகை ரம்யா நம்பிசனும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Gallery