டூட் படத்திற்காக ரேஸில் இருந்து வெளியேறிய பிரதீப் ரங்கநாதனின் LIK திரைப்படம்.. பாவம்யா!
Tamil Cinema
Actors
Pradeep Ranganathan
By Bhavya
பிரதீப் ரங்கநாதன்
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இதனை அடுத்து இவரே இயக்கி நடித்திருந்த லவ் டுடே திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIK) என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
மேலும் இப்படத்தில் முக்கியமான ரோலில் எஸ் ஜே சூர்யா நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ‘டூட்' திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
எப்போது தெரியுமா?
இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாக இருந்த நிலையில், தற்போது (LIK) திரைப்படத்தை ஒத்திவைத்துள்ளனர். அதன் படி, டிசம்பர் 18ம் தேதி வியாழக்கிழமை அன்று இந்த திரைப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.