நடிகை ருக்மணி நடிப்பை டாப் நடிகருடன் விமர்சித்து அவமதித்த தயாரிப்பாளர்.. ரசிகர்கள் எதிர்ப்பு!

Sivakarthikeyan Actress Rukmini Vasanth
By Bhavya Oct 07, 2025 05:30 AM GMT
Report

ருக்மணி வசந்த்

நடிகை ருக்மணி வசந்த், கன்னடத்தில் வெளிவந்த சப்த சாகரதாச்சே எல்லோ படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர்.

அதை தொடர்ந்து, தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

பின் ருக்மணி வசந்த் நடிப்பில் மதராஸி திரைப்படம் வெளியானது. இப்படத்தில் ருக்மணி வசந்த் நடிப்பை அனைவரும் பாராட்டி வந்தனர். ருக்மிணி வசந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் காந்தாரா சாப்டர் 1.

நடிகை ருக்மணி நடிப்பை டாப் நடிகருடன் விமர்சித்து அவமதித்த தயாரிப்பாளர்.. ரசிகர்கள் எதிர்ப்பு! | Producer About Actress Rukmini Acting Skill

இப்படத்தின் புரொமோஷன் விழாவில் தயாரிப்பாளர் ரவிஷங்கர், ருக்மணி வசந்த் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரசிகர்கள் எதிர்ப்பு! 

அதில், " ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாக இருக்கும் எங்களது புதிய படத்திலும் ருக்மணி வசந்த் நடிக்கிறார். படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். திறமைக்கு இணையான அல்லது குறைந்த பட்சம் அவருக்கு அருகில் வரக்கூடிய ஒரு கதாநாயகியை தேடினோம்.

ருக்மணியிடம் மட்டும் அதை கண்டுபிடிக்க முடிந்தது. ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ருக்மணி வசந்த் 80 சதவீதத்தையாவது கொடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார். தற்போது, இந்த கருத்துக்கு பலர் ட்ரோல் செய்து வருகின்றனர்.     

நடிகை ருக்மணி நடிப்பை டாப் நடிகருடன் விமர்சித்து அவமதித்த தயாரிப்பாளர்.. ரசிகர்கள் எதிர்ப்பு! | Producer About Actress Rukmini Acting Skill