விஜய் இடத்தை பிடிக்கப்போவது யார்? டியூட் பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில்..
டியூட்
இயக்குநர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் சாய் அபியங்கர் இசையில் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக பிரதீப் ரங்கராதன் பல இடங்களுக்கும் பேட்டிகளுக்கு சென்று வருகிறார்.
அப்படி ஒரு பேட்டியொன்றில், விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டார், அவர் இடத்தை யார் நிரப்பப்போகிறார்கள்? என்ற கேள்விக்கேட்கப்பட்டது.
விஜய் இடத்தை பிடிக்கப்போவது
அதற்கு பிரதீப், யாருமே அவரது இடத்தை நிரப்ப முடியாது. அவர் இன்று இந்தளவுக்கு உச்சத்தை தொட்டதற்கு பின்னால் அவரின் 30 வருட உழைப்பு இருக்கிறது.
விஜய்யோ, அஜித்தோ, ரஜினியோ இன்று இவ்வளவு சக்சஸ்ஃபுல்லான ஸ்டாராகி இருக்கிறார்கள் என்றால் ஆதற்கு ரசிகர்கள் தான் முக்கிய காரணம். ஸ்கிரிப் எல்லாம் காரணமில்லை.
அடுத்த 30 வருடத்தில், பார்க்கலாம், யார் அந்த உயரத்தை தொடுகிறார்கள் என்று, அதுவும் ரசிகர்களால் தான் தீர்மானிக்கப்படும் என்று பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.