நயன்தாரா போல ஹீரோயின் தான் முக்கியம்!! தில்லாலங்கடி லீலையை ஆரம்பித்த பிரதீப் ரங்கநாதன்
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட் பட்மாக அமைந்தது கோமாளி. இப்படத்தில் இயக்குனராக தன் சிறு வயதில் அறிமுகமாகி வெற்றியை கொடுத்தார் பிரதீப் ரங்கநாதன். அப்படத்தினை தொடர்ந்து லவ் டுடே படத்தினை இயக்கி நடித்து 100 கோடி வசூலை ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கொடுத்தார்.
அப்படத்தினை தொடர்ந்து இந்தியளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிரதீப் ரங்கநாதன், தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்தவகையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிரூத் இசையில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க போவதாகவும், நடிகை நயன் தாரா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியானது.

இதனை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸின் உதவி இயக்குனர் மிதுன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளாராம். இப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகவுள்ளதால் கதையை தாண்டி கதாநாயகிகளின் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாராம் மிதுன்.
இதனால் பிரதீப் ரங்கநாதன் அவரே யாரை கதாநாயகியாக நடிக்க வைக்கலாம் என்ற முடிவை எடுத்து வருகிறாராம். அதனால் ரஷ்மிகா மந்தனா மற்றும் பிரியங்கா மோகன் பெயரை கூறியிருக்கிறாராம்.
எப்படியாவது முன்னணி நடிகைகளை அந்த படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று பிரதீப் ரங்கநாதன் உறுதியாக இருக்கிறாராம். முன்னணி நடிகர்களுக்கு இணையாக படத்தின் நடிகைகளை தேர்வு செய்யும் அளவிற்கு பிரதீப் ரங்கநாதன் உயர்ந்து தில்லாலங்கடி வேலையை பார்த்திருக்கிறாராம்.