ரெண்டே படம் தான்..இத்தனை கோடி சம்பளம் வாங்கி தரையில் நடக்கும் பிரதீப் ரங்கநாதன்..
பிரதீப் ரங்கநாதன்
தமிழில் கடந்த 2019ல் நடிகர் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு உள்ளிட்ட பல நடிப்பில் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய ஆதரவை பெற்ற படம் கோமாளி.
இயக்கிய முதல் படத்திலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே என்ற படத்தில் இயக்கி, நடித்தார். இப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வசூலும் பெற்றது.
இதன்பின் பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் அதிகரிக்க, இயக்குநர் விக்னேஷ் ஷிவன் இயக்கும் LIK படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து டிராகன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
17 கோடி
இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் ஒரு படத்திற்கு 17 கோடி சம்பளமாக பெற்று வருவதாக பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சகஜமாக எல்லோரிடமும் பழகி வருகிறாராம்.
பிரதீப் ரங்கநாதனின் இந்த செயலை பார்த்த சக நடிகர் நடிகைகள் வியந்து பார்ப்பதாகவும் கூறியிருக்கிறார்.
