45 வயதில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் நடிகை! அவரே வெளியிட்ட வீடியோ..

By Edward Jun 01, 2021 04:34 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர நடிகைகளாக பலர் தமிழிலும் நடித்து கலக்கி வருவார்கள். அந்தவகையில் கடந்த 20 ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை பிரகதி மகாவதி.

தமிழில் பல படங்களில் நடித்து வரும் பிரகதி சினத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார். பெண், வம்சம் உள்ளிட்ட தமிழ் சீரியல்களை தொடர்ந்து, பிரபல தொலைக்காட்சியில் ஆரண்மனை கிளி என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், லாக்டவுன் என்பதால் தன்னுடைய மகனுடனும் மகளுடனும் நாட்களை கழித்துவருகிறார். வீட்டில் இருந்து கொண்டே உடற்பயிற்சி, நடனம் என வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுப்பார்.

அந்தவகையில், வெறித்தனமாக உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி மேற்கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை பிரகதி மகாநதி.