15 வருடம் அஜித்! 11 வருடங்களாக விஜய்யை ஒதுக்கி வைத்திருந்த நடிகர் பிரகாஷ் ராஜ்! இப்போ ஏன்?
தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக திகழ்ந்து இவர் என் படத்தில் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர் நடிகர்கள் என போட்டிபோட்டி கால்ஷீட் கேட்கும் அளவிற்கு உயர்ந்து நிற்பவர் நடிகர் பிரகாஷ் ராஜ். முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்தும் தமிழ் தவிர்த்து கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளில் தற்போது நடித்து பிஸியாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்தும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
வில்லு படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த பிறகு தற்போது 11 வருடங்கள் கழித்து நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் நடிகர் அஜித்தின் பரமசிவம் படத்திற்கு பிறகு இதுவரை 15 ஆண்டுகளாகியும் அவர் படத்தில் இன்னும் நடிக்காமல் இருந்து வருகிறார் பிரகாஷ் ராஜ்.
தற்போது அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார் பிரகாஷ் ராஜ். தற்போது தெலுங்கு நடிகர்கள் சங்கத்தேர்தலில் தலைவர் பதிவிக்கு போட்டியிடுவது சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருவது என்பது குறிப்பிடத்தக்கது.