நீங்களே தேவையில்லாத ஆணிதான்.. வாய்ப்புக்காக ஜால்ரா போடும் விருமன் நடிகர்..
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, சங்கர் மகள் அதிதி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இன்று வெளியான படம் விருமன் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இப்படத்தில் முதன்முதலில் நடிகையாக அறிமுகமாகிய நடிகை அதிதி சங்கர் இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார்.
இப்படத்தில் கார்த்தியின் அப்பாவாக நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்திருப்பார். ஆடியோ லான்ச்சில் கார்த்தியின் நடிப்பை பற்றி புகழ்ந்து தள்ளிப்பேசினார். அதிலும் கார்த்திக்கு இப்படத்திற்காக விருது கிடைக்கும் என்றெல்லாம் பேசினார்.
ஆனால் படத்தில் அப்படியொரு நடிப்பு ஓரளவிற்கு தான் என்று தேசிய விருது படத்தோடு இப்படம் ஒப்பிடமுடியாது என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். வாய்ப்பு கொடுத்தார் என்பதற்கெல்லாம் இப்படியா பேசுவது.
மேலும் படத்தில் நடித்த வடிவுக்கரசியும் அப்படித்தான் புகழ்ந்து கொஞ்சம் ஓவரகாவும் பேசினார். பல படங்களில் நடித்த பிரகாஷ் ராஜ் மற்றும் வடிவுக்கரசி படம் எப்படி வந்திருக்கும் என்று தெரிந்திருந்தும் ஏன் இப்படி பில்டப் கொடுத்தார் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
வாய்ப்பு கொடுத்த ஒரே காரணத்திற்காக புகழ்ந்து பேசினால் பரவாயில்லை. அப்படி பேசி எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது படத்தின் பிரமோஷன் தான் காரணம் என்றும் தேவையில்லாத கதாபாத்திரம் நீங்கள் தான் என்றும் கேலி செய்தும் வருகிறார்கள்.