நடிகை பிரணிதாவிற்கு குழந்தை பிறந்தது.. ஆணா? பெண்ணா?
Pranitha Subhash
By Kathick
சகுனி படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரணிதா. இதன்பின், சூர்யாவுடன் இணைந்து மாசு என்கிற மாசில்லாமணி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டு குடும்ப பெண்ணாக செட்டில் ஆகிவிட்டார். கர்ப்பமாக இருந்த நடிகை பிரணிதா, இன்று அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
அம்மாவாகியுள்ள பிரணிதாவிற்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், பெண் குழந்தை மிகவும் அழகாக இருக்கிறாள் என்றும் கூறி வருகிறார்கள்.

