நான் இருக்கவேண்டிய இடம்டா அது...? அஜித் இடத்தை பிடிக்காமல் போன வாரிசு நடிகர்

prashanth ajith kumar
By Kathick Apr 03, 2022 02:25 PM GMT
Report

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2000ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தீனா. இப்படத்தின் கதையை முதன் முதலில் பிரஷாந்துக்கு தான், முருகதாஸ் கூறியுள்ளாராம். பிரஷாந்துக்கு மிகவும் பிடித்துப்போக, தீனா படத்தில் நடிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால், எதிர்பாராத விதமாக, தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்ததால், தீனா படத்தில் பிரஷாந்தால் நடிக்கமுடியாமல் போனதாம். அஜித்தை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிய தீனா படத்தில் மட்டும், பிரஷாந்த் நடித்திருந்தால், அவருக்கும் மிகவும் வெற்றியை தீனா படம் தேடி தந்திருக்கும். இதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இப்படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரஷாந்த் தானாம்.

இப்படத்திற்கு முன் ஷங்கர் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜீன்ஸ். இப்படத்தில் பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். ராஜீவ் மேனன் கூறிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் கதையில், பிரஷாந்துக்கு ஜோடியாக தபுவும், மம்முட்டிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய்யும் நடிப்பார்கள் என்று கூறியுள்ளார்.

ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஜோடியை ரசிகர்கள் கொண்டாடியதால், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திலும், பிரஷாந்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய்யை போடுங்கள் என்று பிரஷாந்தின் தந்தை கூறியுள்ளார். ஆனால், அதற்கு ராஜீவ் மேனன் இதற்கு சம்மதிக்காததால் பிரசாந்த் படத்திலிருந்து விலகியுள்ளார். இப்படம் அஜித்துக்கு தேடி தந்த மாபெரும் வெற்றியை அப்போது பிரஷாந்த் மிஸ் செய்துள்ளார். ஒருவேளை இந்த இரு படங்களிலும் பிரஷாந்த் நடித்திருந்தால், இன்று டாப் இடத்தில் இருந்துருப்பாரோ..?