சிம்பு மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா விஜய்யை காலிபண்ணிருப்பாரு!! கொந்தளித்த பிரபல இயக்குநர்
தமிழக அரசியலில் காலெடி எடுத்து வைத்த நாளில் இருந்து தற்போது வரை விஜய் பல சவால்களையும் பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவு இருந்தாலும் அரசியல் பயணத்தின் தொடக்க கட்டத்திலேயே அவரை சுற்றி பல விமர்சனங்கள், எதிர்ப்புகள் எழுந்து வருவது அதிகரித்துள்ளது.
பிரவீன் காந்தி
மனைவி சங்கீதா விவாகரத்து மனுதாக்கல் முதல் நடிகை திரிஷாவுடன் திருமண நிகழ்ச்சியில் ஜோடியாக சென்ற விவகாரம் வரை தற்போது வரை பெரியளவில் பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது. பல இதுகுறித்து விமர்சித்து வந்த நிலையில், இயக்குநரும் பிக்பாஸ் பிரபலமுமான பிரவீன் காந்தி, சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

சிம்பு மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா
விவாத நிகழ்ச்சியின் போது, விஜய் மற்றும் அவர் கட்சிக்காரர்களின் செயல் உள்ளிட்டவற்றை விமர்சித்து பேசியிருக்கிறார். மேலும், விஜய் நல்லா நடனாடுகிறார், அவர் இருந்த காலத்தில் டான்சர் இல்லை, சிம்பு டைவேட்-ஆகி போய்ட்டாரு. சிம்பு மட்டும் ஒழுங்காக இருந்திருந்தால் விஜய்யை காலி பண்ணிருப்பார் என்று கடுமையாக பேசியுள்ளார். பிரவீன் காந்தி, சிம்புவுடன் விஜய்யை இணைத்து பேசியதை விஜய் ரசிகர்கள் பலரும் அவரை கடுமையாக திட்டி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.