எனக்கு அந்த நடிகர் தான் வேண்டும்! அடம்பிடிக்கும் பிரேமம் பட தமிழ் நடிகை..
சினிமாவை பொறுத்த வரையில் தனக்கு பிடிக்கும் நடிகர்களுடன் இப்படி நடிக்க ஆசை அந்தமாதிரி நடிக்க ஆசை என நடிகைகள் ஒரு லிஸ்ட் வைத்துக்கொள்வார்கள். அந்த வகையில் மலையாள படத்தில் டீச்சர் நடிகையாக அறிமுகமாகி பெரியளவில் பேர் பெற்றவர் தான் நம்ம அம்மணி.
அப்படி மலையாளம், தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிகட்டி பறந்து வருகிறார் நடிகை. தமிழில் ஒல்லி நடிகரின் படம் ஒன்று நல்ல வரவேற்பு கொடுத்ததை அடுத்து அந்த படத்தின் பாடல் பெரிய ஹிட்டும் கொடுத்து பேசப்பட்டது.
இந்நிலையில், தமிழில் நடிகை ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும், ஒல்லி நடிகருடன் நடித்த படத்திற்கு பின்னர் தான் நடிகைக்கு நிறைய பட வாய்ப்புகள் தேடி வந்ததாம். அதனால் மீண்டும் ஒல்லி நடிகருடன் இணைந்து எப்படியாவது நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு வருகிறாராம்.
ஆனால் இதை இயக்குனர் தயாரிப்பாளர்கள் தன்னை சந்திக்கும் போதெல்லாம் அவர் தான் வேண்டும் அவரை புக் செய்து வாங்க என்று கன்டிஷன் போடுகிறாராம் அம்மணி. இதனால் இயக்குனர் தயாரிப்பாளர்கள் எப்படி அந்த மனுஷனை புக் செய்வது ஹாலிவுட் வரை போய்ட்டார் என புலம்பி வருகிறார்களாம்.