திருமணமாகி ஒரே மாதத்தில் இப்படியொரு நிலை!! பிரேம்ஜியை, மனைவி இந்து படுத்தும்பாடு..
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் திகழ்ந்து பிரபலமானவர் நடிகர் பிரேம்ஜி அமரன். அவரது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் பல படங்களில் நடித்துள்ள பிரேம்ஜி, விஜய்யை வைத்து இயக்கும் கோட் படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
இந்நிலையில் 44 வயதாகியும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருந்த பிரேம்ஜி, இந்து என்பவரை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின் மனைவியுடன் ரொமான்ஸ் செய்த புகைப்படங்கள் ஹனிமூன் சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
தற்போது சிங்கிளாக சுற்றி இருந்த பிரேம்ஜிக்கா இந்த நிலைமை என்று கூறும் அளவிற்கு அவரை கலாய்த்தபடி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் மனைவி இந்து. மனைவி துணியை துவைத்து காயப்போட்டும், வீட்டை மாப்பு போட்டு துடைக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார் இந்து.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பிரேம்ஜிக்கு வந்த சோதனையை பார்த்தீங்களா? என்று கேலி செய்து வருகிறார்கள்.