பார்ட்டி, பப்!! பிரேம்ஜி திருமணதிற்கும் பின்பும் இப்படியா.. பிரபலம் சொன்ன தகவல்!!

Gangai Amaren Premji Amaren Venkat Prabhu Actors Tamil Actors
By Dhiviyarajan Jun 12, 2024 11:31 AM GMT
Report

பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரும், நடிகருமான பிரேம்ஜி அமரனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இவர் இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களது திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது. இதில் ஜெய், வைபவ், அரவிந்த் என சென்னை 600028 பட கூட்டாளி நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

எப்பொழுதுமே தன்னை முரட்டு சிங்கிளாக காட்டிக்கொள்ளும் பிரேம்ஜி, தனது 46 வயதிலிலும் கல்யாணம் ஆகாமல் செம கெத்தாக ஊர் சுற்றி வந்தார். ஆனால் இப்போது திருமணம் ஆகி சர்வமும் அடங்கி போய் இருக்கிறாராம்.

பிரேம்ஜி, அடிக்கடி தனது நெருங்கிய நண்பர்களுடன் பார்ட்டி பப் சென்று வருவார். அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.

ஆனால் திருமனத்திற்கு பின் பிரேம்ஜி அனைத்தையும் தவிர்த்துவிட்டாராம். பார்ட்டி என்றாலே நோ சொல்லிவருவதாக பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். 

பார்ட்டி, பப்!! பிரேம்ஜி திருமணதிற்கும் பின்பும் இப்படியா.. பிரபலம் சொன்ன தகவல்!! | Premgi Amaren Changed Totally After Marriage