இதுதான் கர்மா..வாய்ப்புக்காக லவ் டுடே இயக்குனரிடம் கெஞ்சிய நடிகர் பிரேம்ஜி..

Premji Amaren Love Today Pradeep Ranganathan
By Edward Nov 17, 2022 05:33 AM GMT
Report

தமிழ் சினிமாவில் குறும்படம் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமாகி ஜெயம்ரவி, காஜல் அகர்வால் நடித்த கோமாளி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்து நல்ல வரவேற்பு பெற்றவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

20 வயதான போது கோமாளி படத்தினை இயக்கியிருந்த பிரதீப், லவ் டுடே என்ற படத்தினை எடுத்து மாபெரும் வெற்றியை பெற்று வருகிறார். இளைஞர்கள் மத்தியில் தன் நடிப்பாலும் இயக்கத்தாலும் 50 கோடி வசூல் கிளப்பில் சேர்ந்து சாதனை படைத்து வருகிறார்.

இதுதான் கர்மா..வாய்ப்புக்காக லவ் டுடே இயக்குனரிடம் கெஞ்சிய நடிகர் பிரேம்ஜி.. | Premgi Reply After 8Yrs Pradeep Post For Chance

யுவன் சங்கராஜா இசையில் வெளியான இப்படத்தின் தியேட்டர் எண்ணிக்கைகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து பல பிரபலங்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட சமீபத்தில் பிரதீப்பை அழைத்து பேசியிருந்தார். இந்நிலையில் காமெடி நடிகர் பிரேம்ஜி தனக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கெஞ்சியபடி ஒரு பதிவினை போட்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு பிரதீப் ரங்கநாதன் ஒரு குறும்படத்தை இயக்கி அதை பார்க்கும் படியும் இல்லையென்றால் லைக் செய்யும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதை கண்டுகொள்ளாத பிரேம்ஜி 8 வருடம் கழித்து பிரதீப் ஒரு பெரிய ஹிட் கொடுத்தவுடன் அந்த பதிவுக்கு திரும்ப ஒரு பதிவினை போட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலர் கிண்டலடித்தும் வருகிறார்கள்.

Gallery