அப்படியொரு அழகில் மணமகள் இந்து!! வைரலாகும் நடிகர் பிரேம்ஜி Pre-Wedding புகைப்படம். .
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரனுக்கு சேலத்தை சேர்ந்த இந்து என்ற பெண்ணுடன் திருமணம் நடக்க இருக்கிறது என்று தகவல் வெளிவந்தது. அந்த செய்தியை வெங்கட் பிரபு அறிக்கை ஒன்றின் மூலம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அந்த அறிக்கையில், இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும், அளவில்லாத அன்பையும் வழங்கிய ரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்!.
எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. வரும் 9ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார்.
அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம் என்று வெங்கட் பிரபு கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரேம்ஜி - இந்து இருவருக்கும் இன்று 9 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ள நிலையில் pre-wedding நடந்துள்ளது. சென்னை 28 படத்தின் நடிகர்களான ஜெய், வைபவ், மிர்ச்சி சிவா, வெங்கட் பிரபு உள்ளிட்டவர்கள் எடுத்த புகைப்படம் மாற்றும் பிரேம்ஜி - இந்து இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.





