அப்பா வேண்டாம் இந்த நடிகர் வேண்டும்.. தயாரிப்பாளரிடம் அடம்பிடிக்கும் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா..

Rajinikanth Aishwarya Rajinikanth
By Jai Nov 02, 2022 09:18 AM GMT
Report

பொன்னியின் செல்வன் படத்தின் பல கோடி லாபத்தால் மிகப்பெரிய வெற்றியை கண்டு வருகிறது லைக்கா நிறுவனம். இப்படத்தினை தொடர்ந்து 2 முன்னணி நடிகர்களின் படத்தினை தயாரிக்கவுள்ளது.

அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படத்தினையும் தயாரிக்கவுள்ளது லைக்கா நிறுவன்ம். அப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார் என்ற செய்தியும் வெளியானது.

இந்நிலையில் ஐஸ்வர்யா தேர்வு செய்த வேலைக்கில்லாத நடிகர் வேண்டாம் என்று லைக்கா கூறி வருகிறதாம். ஆனால் அந்த நடிகர் தான் வேண்டும் என்று ஐஸ்வர்யா அடம்பிடித்து வருகிறாராம்.

ஏற்கனவே அந்த வாரிசு நடிகர் நடிப்பில் எடுக்கப்பட்ட படம் கிடப்பில் இருப்பதால் அவர் வேண்டாம் என்ற காரணத்தை கூறி வருகிறார்கள். ஆனால் அந்த ஹீரோ தான் வேண்டும் என்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கண்டிப்பாக கூறிவிட்டாராம்.

அப்பா இல்லையென்றாலும் பரவாயில்லை அவர் வேண்டும் என்று அடம்பிடித்து வருகிறாராம் ஐஸ்வர்யா.