காத்து வாங்கும் சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ்.. தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்ட சிவா

Sivakarthikeyan Prince (2022)
By Kathick Oct 30, 2022 12:00 PM GMT
Report

ப்ரின்ஸ் வசூல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 21ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ப்ரின்ஸ். தெலுங்கு இயக்குனர் அனுதீப் இப்படத்தை இயக்கியிருந்தார். முதல் முறையாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ப்ரின்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

மேலும், இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

காத்து வாங்கும் சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ்.. தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்ட சிவா | Prince Box Office Is Too Low

இந்நிலையில், ஒரு வாரத்தை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ப்ரின்ஸ் திரைப்படம் உலகளவில் ரூ. 45 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. டான், டாக்டர் ஆகிய இரு திரைப்படங்களும் வெளிவந்த சில நாட்களிலேயே ரூ. 100 கோடியை கடந்த நிலையில், ப்ரின்ஸ் திரைப்படம் வசூலில் காத்து வாங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.