காதலரை பிரிந்துவிட்டாரா நடிகை பிரியா பவானி சங்கர்!! இதுதான் காரணமா?
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி டாப் இடத்தினை பிடித்தவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி சீரியல் நடிகையாக கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.
அதன்பின் மேயாத மான் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த பிரியா பவானி சங்கர், கையில் வரிசையாக அடுத்தடுத்த படங்களில் வைத்து நடித்து வருகிறார்.
இதற்கிடையில் தன் காதலர் ராஜ்வேலுடன் வெளிநாட்டுக்கு பறந்து இரு மாதங்கள் ஜாலியாக இருந்து வந்தார். சமீபத்தில் ஈசிஆர் பகுதியில் பெரிய பங்களாவை வாங்கி காதலருடன் குடியேறினார். மேலும் ஈசிஆர் பகுதிக்கு பக்கத்தில் ஒரு ரெஸ்டாரெண்ட் ஆரம்பித்து அதையும் பார்த்து வருகிறார்.
இந்நிலையில் பிரியா பவானி சங்கர் தன் காதலர் ராஜ்வேலுடன் பிரேக்கப் செய்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், திருமணத்திற்கு பின் நடிக்க வேண்டாம் என்று ராஜ்வேல் கூறியதால் தான் பிரியா பவானி சங்கர் பிரேக்கப் செய்திருப்பதாகவும், ஆனால் அது உண்மை இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
தற்போதைக்கு பிரியா பவானி சங்கர் திருமணம் செய்யப்போவதில்லை என்றும் 4 ஆண்டுகளுக்கு பின் நடக்கலாம் என்று அவரது தோழிகளிடம் கூறி புலம்பியதாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.