ஏன் என் கிட்ட அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கான்னு கேட்கிறீங்க!! கொந்தளித்து பேசிய நடிகை பிரியா பவானி சங்கர்..

Priya Bhavani Shankar Gossip Today Tamil Actress Actress
By Edward Aug 09, 2024 11:00 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இதையடுத்து இவர் மேயதா மான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். தற்போது பிரியா பவானி, தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டு இருக்கிறார். இதனிடையே பிரியா பவானி தனது கல்லூரி காலத்திலிருந்து காதலித்து வரும் ரத்னவேலுவுடன் விரைவில் திருமணம் செய்யப்போகிறேன், சோம்பேறித்தனத்தால் திருமணம் தள்ளி போயுள்ளது.

ஏன் என் கிட்ட அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கான்னு கேட்கிறீங்க!! கொந்தளித்து பேசிய நடிகை பிரியா பவானி சங்கர்.. | Priya Bhavani Shankar Hurt Abour Adjustment Issues

அடுத்த ஆண்டு நடைபெறும் என்று டிமாண்டி காலணி 2 படத்தின் பிரமோஷனுக்கு அளித்த பேட்டியில், அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றியும் நெகட்டிவாக பேசுபவர்கள் பற்றியும் பகிர்ந்துள்ளார். என் பெற்றோர்கள் சோசியல் மீடியாவில் இருக்கிறார்கள். அப்படி சிலர் போடும் தவறான செய்திகளை பார்த்த அவர்கள், காலில் எழுந்து பார்க்கும் போது எப்படி இருக்கும் என்று நான் யோசிக்கும் போது அது கஷ்டமாக இருக்கும். ராசியில்லா நடிகை என்று என்னை தெரிந்தவர்கள் யாரும் சொல்லமாட்டார்கள்.

முகத்திற்கு முன் மோசமான வார்த்தைகளை நேரில் வந்து சொல்லமாட்டார்கள். விமர்சிப்பது எல்லோரையும் மாற்றும் கலாய்ப்பதில் பிரச்சனை இல்லை. ஆனால், ஒருவர் சரியும் போது இன்னும் இழுத்துவிட்டு சிரிப்பவர்களால் (Bullying) அது எப்படி முடிகிறது என்று தெரியவில்லை. 4 தோல்வி படத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்வது, 4 பெரிய படத்தில் நான் நடித்தது Unlucky என்றால் எனக்கு அது பெருமை என்று தெரிவித்துள்ளார்.

ஏன் என் கிட்ட அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கான்னு கேட்கிறீங்க!! கொந்தளித்து பேசிய நடிகை பிரியா பவானி சங்கர்.. | Priya Bhavani Shankar Hurt Abour Adjustment Issues

மேலும் நான் பத்து தல படத்தில் நடித்திருந்த போது கொடுத்த ஒவ்வொரு பேட்டியிலும், சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கா? என்று கேட்கிறார்கள். அதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள். இதற்கு முன் இதை என்னிடம் யாரும் கேட்டதில்லை. நான் என்ன சொல்வதை நீங்கள் விரும்புகிறீர்கள்.

நான் ஒரு படத்தில் நடிக்கும் போது இந்த கேள்வி ஏன் வருகிறது. இதை ஒரு ஹீரோவிடம் நீங்கள் கேட்பீர்களா?. உங்கள் படத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கா? என்று கேட்பீர்களா. யாரும் இதை செய்தேன், வேறுவழியை பயன்படுத்தினேன் என்று சொல்லமாட்டார்கள்.