என்ன சிம்ரன் இதெல்லாம்!! பிரியா பவானி சங்கர் ஆரம்பித்த புதிய தொழிலின் வீடியோ

Priya Bhavani Shankar
By Edward Feb 01, 2023 11:00 AM GMT
Report

தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரை சீரியல் நடிகையாக கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

அந்த சீரியலால் வெள்ளித்திரையில் மேயாத மான் படத்தில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

என்ன சிம்ரன் இதெல்லாம்!! பிரியா பவானி சங்கர் ஆரம்பித்த புதிய தொழிலின் வீடியோ | Priya Bhavani Shankar Start New Bussiness Food

சமீபத்தில் லட்சத்தில் சம்பளம் வாங்கி வரும் பிரியா பவானி ஈசிஆர் பகுதியில் பெரிய பங்களா ஒன்றினை கட்டி காதலருடன் குடியேறினார்.

அதன்பின் கதாநாயகிக்கி முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிப்பை தாண்டி தற்போது ஓட்டல் தொழிலையும் ஆரம்பித்திருக்கிறார். சமையல்காரர் போன்று உடையணிந்து சமைக்கும் வீடியோவை பகிர்ந்து ஆரம்பித்துவிட்டோம் என்று கூறி ஒரு பதிவினை போட்டுள்ளார்.