யாரையும் கூப்பிடாமல் திருமணம் செய்தது ஏன்? நடிகை பிரியா பவானி சங்கர் விளக்கம்..
நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய நீண்டநாள் காதலர் ராஜ்வேல் ராஜாவை நவம்பர் 11 ஆம்தேதி திருமணம் செய்தார். திருமணத்தை சினிமா பிரபலங்களுக்குக்கூட சொல்லாதது ஏன் என்ற கேள்வி எழும்பியதற்கு விளக்கமும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

பிரியா பவானி சங்கர்
தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர், ரவி தேஜா நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான இருமுடி படத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் வரவேற்பையும் பெற்றார்.
தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் பிரியா பவானி, திடீரென நேற்று நவம்பர் 11 ஆம் தேதி தன்னுடைய நீண்டநாள் காதலர் ராஜ்வேல் ராஜாவை சாதாரண முறையில் திருமணம் செய்து கொண்டார்.

திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில், சினிமா பிரபலங்களுக்கு கூட சொல்லாமல் திருமணம் செய்தது ஏன் என்ற பலரும் சோசியல் மீடியாவில் கேள்வியை எழுப்பினர். இந்நிலையில் அதற்கு பதிலாகவும் நன்றியுடன் தன் விளக்கத்தை அளித்துள்ளார் பிரியா பவானி சங்கர்.
யாரையும் கூப்பிடாமல்
அன்பும் நன்றியும் நிறைந்த மனதுடன் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்கிறேன். நவம்பர் 11 ஆம்தேதி, எங்கள் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், எனக்கும் ராஜுக்கும் இனிதே திருமணம் நடந்தது.
இத்தனை ஆண்டுகளாக என் பயணத்தில் அன்பும் ஆதரவும் அளித்து, என் வாழ்வின் முக்கிய தருணங்களில் மகிழ்ச்சியுடன் பங்கெடுத்துக் கொண்ட பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.
நெருங்கியவர்கள் சூழ ஒரு சிறிய நிகழ்வாக திருமணத்தை கொண்டாடியதால், உங்கள் அனைவரையும் நேரில் அழைக்க இயலவில்லை. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்கள் அன்பையும் வாழ்த்தையும் நான் விரும்புகிறேன். உங்கள் அன்பு என்றும் இருக்கட்டும் என்று திருமண புகைப்படத்துடன் இதை தெரிவித்துள்ளார் பிரியா பவானி சங்கர்.