நான் யாருக்கூட வேணாலும் போவேன்!! ஹாஸ்டலில் காதலருடன் மாட்டிய நடிகை பிரியா பவானி சங்கர்
நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி சின்னத்திரை சீரியல் நடிகையானவர் நடிகை பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் முக்கிய ரோலில் நடித்த பிரியா, வெள்ளித்திரையில் கடைக்குட்டி சிங்கம், மேயாத மான் போன்ற படங்களில் நடித்து அறிமுகமாகினார்.
அதன்பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வரும் பிரியா, தன்னுடைய நீண்ட நாள் காதலர் ராஜ்வேலுடன் ஈசிஆர் பகுதியில் வீடு வாங்கி குடியேறினார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கல்லூரி படிக்கும் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.
காலேஜில் முதலாம் ஆண்டு படிக்கும் போது தான் ரிலேஷன்ஷிப் ஆரம்பித்தது. ஹாஸ்டலில் வாரதி இறுதியில் அவுட்டிங் செல்ல 2 மணி நேரம் மட்டுமே அனுமதிப்பார்கள். அப்போது என் காதலர் ஹாஸ்டல் உள்ளே காரில் வந்தார்.
காரில் ஏறி நான் வெளியில் சென்றபோது செக்யூரிட்டி வந்து கார் கண்ணாடியை ஒப்பன் செய்ய சொன்னார். எங்க பையன் கூட போறன்னு கேட்டார்.
உடனே என்ன சொல்றதுன்னு தெரியல, என்னோட டைம், அவுட்டிங் டைம்ல நான் யாருக்கூட வேணாலும், எங்கவேணாலும் போவேன், நீங்க வாடர்னை கூப்பிட்டு கேளுங்க எங்க வீட்டுக்கே கால் பண்ணு சொல்லுங்க எனக்கு என்னன்னு சொல்லிட்டேன் என்று பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.