பாலிவுட்டில் அந்த விஷயம், என்னுடைய தனிப்பட்ட அனுபவம்.. பிரியாமணி ஓபன் டாக்
Priyamani
Bollywood
Actress
By Bhavya
பிரியாமணி
பருத்திவீரன் படத்தின் மூலம் முத்தழகாக மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியாமணி. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடத்தில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.
ஓபன் டாக்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை பிரியாமணி பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், "பாலிவுட் கலைஞர்கள் தென் மாநில கலைஞர்களை ஒழுங்காக மதிக்கமாட்டார்கள் என்று சொல்வார்கள். என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் எனக்கு அப்படி எதுவும் நடந்ததில்லை.
இன்னும் சொல்லப்போனால் தென் மாநில கலைஞர்கள் மீதும், சினிமா மீதும் அவர்களுக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.