ரஜினிக்கு நோ.. தனுஷுக்கு மட்டும் உடனே ஓகே சொன்ன இளம் நடிகை
Dhanush
Rajinikanth
Priyanka Arul Mohan
By Parthiban A
ரஜினிகாந்த் வேண்டாம்
நடிகர் ரஜினி தான் தற்போது தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் ஆக இருந்து வருகிறார். ஆனால் அவருக்கு வயதாகிவிட்டதால் பல நடிகைகள் அவருக்கு ஜோடியாக நடிக்கவே தயக்கம் காட்டுகின்றனர். அதனாலேயே பல படங்களில் அவரது தங்கை, மகள் போன்ற கதாபாத்திரங்களுக்கு தான் இளம் நடிகைகள் வருகிறார்கள்.
அப்படி ரஜினி அடுத்து நடிக்கும் ஜெயிலர் படத்தில் நடிக்க பிரியங்கா அருள் மோகனை அணுகியபோது அவர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க முடயாது என சொல்லிவிட்டாராம்.

தனுஷுக்கு ஓகே
இந்நிலையில் தற்போது தனுஷ் அடுத்து நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி பேசு பொருளாக மாறி இருக்கிறது.