அந்த நடிகைக்காக படப்பிடிப்பில் பொறுமையாக காத்திருந்த விஜய்..

Vijay Tamil Cinema Priyanka Chopra
By Yathrika Mar 03, 2025 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவின் இளைய தளபதியாக என்றும் மக்கள் மனதில் வாழ்ந்திருப்பவர் நடிகர் விஜய்.

இப்போது தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார், அதன்பிறகு அரசியலில் முழுவதும் ஈடுபட உள்ளார்.

இவரை பற்றி அண்மையில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் அம்மா பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், தமிழன் படத்தில் முதலில் பிரியங்கா சோப்ரா நடிக்க மாட்டேன் என்றார், பின் அவரது அப்பாவிற்காக நடிக்க ஒப்புக் கொண்டார்.

நடனம் மிகவும் கடினமாக இருந்ததால் நீண்ட நேரம் பயிற்சி எடுத்தார். அப்போது அவருக்காக விஜய் நீண்ட நேரம் படப்பிடிப்பில் பொறுமையாக காத்திருந்தார் என்றார்.

அந்த நடிகைக்காக படப்பிடிப்பில் பொறுமையாக காத்திருந்த விஜய்.. | Priyanka Chopra Mother About Vijay