9 வருடங்களாக பிளாப் படங்கள்.. விஜய் பட நடிகைக்கு சம்பளம் மட்டும் இவ்ளோவா
By Dhiviyarajan
பாலிவுட் படங்களை தாண்டி தற்போது ஹாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருபவர் பிரியங்கா சோப்ரா.
இவர் தளபதி நடிப்பில் 2002 -ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து பிரபல நடிகையாக மாறினார்.
நடிகை பிரியங்கா சோப்ரா, தொடர்ந்து 9 வருடங்களாக எந்த ஹிட்களும் இல்லாவிட்டாலும் அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகையாக இருக்கிறார். கடைசியாக பாஜிராவ் மஸ்தானி தான் பிரியங்கா சோப்ராவுக்கு ஹிட் படமாக அமைந்தது.
அதன் பின் பிரியங்கா பாலிவுட் படத்தில் நடிக்கவில்லை. ஹாலிவுட் பக்கம் சென்று விட்டார். அங்கு அவர் நடிக்கும் எல்லா படங்களும் தோல்வியை தான் தழுவி இருக்கிறது. இருப்பினும் பிரியங்கா சோப்ரா, ஒரு படத்திற்கு மட்டும் 40 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார்.