பேருக்குத்தான் வெளிநாட்டு கணவர்! இந்த விஷயத்தில் விட்டு கொடுக்காத பிரியங்கா..
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் கதாநாயகியாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. முன்னாள் அழகியாக திகழ்ந்த பிரியங்கா தமிழில் நடிகர் விஜய்யுடன் தமிழன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகினார்.
அப்படத்திற்கு பிறகு பாலிவுட் சென்று அடுத்தடுத்த படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். கோடிக்கணக்கில் செலவு செய்யும் பட்ஜெட் படங்களிலும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வந்த பிரியங்கா சோப்ரா பிரபல பாடகர் நிக் ஜோனஸ் எனபவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
2018ல் இரு கலாச்சாரத்தின் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்து வரும் பிரியங்கா வாடகைத்தாய் மூலம் சமீபத்தில் பெண் குழந்தை பெற்றுக்கொண்டார்.
இதனை அறிவித்த பிரியங்கா தங்களின் பெண் பிள்ளைக்கு ’மால்டி மேரி சோப்ரா ஜோனஸ்’ என பெயரிட்டுள்ளனர். மால்டி என்பது சமஸ்கிருத வம்சாவளியை சேர்ந்த சிறிய மணம் கொண்ட மலர் மற்றும் நிலவொளி என்று அர்த்தம்.
அதேபோல் கிறிஸ்த்து இயேசுவின் தாயார் பெயர் மேரி பெயரையும் இட்டுள்ளனர். இப்படி வெளிநாட்டு கணவர், வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்று சமஸ்கிருத முறையில் பெயரிடப்பட்டதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.