திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா? வதந்திகளுக்கு VJ பிரியங்கா தேஷ்பாண்டே பதில்..
பிரியங்கா தேஷ்பாண்டே
விஜய் தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, கடந்த குக் வித் கோமாளி 5ன் டைட்டில் வின்னரானார்.
அதன்பின் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த பிரியங்கா, சமீபத்தில் என்பவரை திடீரென திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.
திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா
தற்போது கணவருடன் நேரத்தை செலவிட்டு வரும் பிரியங்கா பற்றிய சில வதந்திகளும் பரவியது. அதாவது திருமணத்திற்கு முன் கர்ப்பமாக இருப்பதாகவும் அதனால் தான் அவசரமாக திருமணத்தை முடித்ததாகவும் செய்திகள் பரவியது.
அதற்கு பிரியங்கா கொடுத்த பதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், உங்க வாய் உங்க உருட்டு என்ற வாசகம் பொறுத்த டீ-சர்ட்டுடன் வாயை மூடி சிரித்தபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
வதந்திகளுக்கு இதன்மூலம் தக்க பதிலடி கொடுத்திருப்பதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
