சூப்பர் சிங்கருக்கு எண்ட் கார்டு போடும் பிக்பாஸ் பிரியங்கா..என்ன மேடம் ஆச்சி?
பிரபல தொலைக்காட்சி சேனலில் பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். சீனியர், ஜூனியர், சேப்பியன்ஸ் என பல கோணங்களில் போட்டிகள் நடத்தி வருகிறது. தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 நடந்து கொண்டிருக்கிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சீரியல் நடிகை மைனா நந்தினி மாகாபாவுடன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஒரு வாரத்தில் ரிட்டர்ன் ஆன பிரியங்காவை கண்ணீருடன் வரவழைத்தனர்.
அது நடந்து ஒரே ஒரு வாரத்தில் பிரியங்கா நிகழ்ச்சிக்கு வரவில்லை. பிக்பாஸ் பிரபலங்களுடன் கடந்தவாரம் ஹைதராபாதிற்கு சென்றிருக்கிறார் பிரியங்கா. அங்கிருந்து இன்னும் வரவில்லை என்பதால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மைனா மீண்டும் தொகுத்து வழங்கினார்.
இப்படி பாதியில் வந்தும் சென்றுமாக இருப்பதால் மைனாவையே நிகழ்ச்சி முடிவடையும் வரை தொகுத்து வழங்கட்டுமே என்று நிகழ்ச்சி குழு முடிவெடுத்துள்ளார்களாம்.
இது எந்தளவிற்கு உண்மையான செய்தி என்பது தெரியவில்லை. பிரியங்கா அங்கிருந்து தமிழகம் எப்போது வருவார் என்பதை பொருத்து தான் பிரியங்கா நிகழ்ச்சியை தொடர்வாரா என்பது தெரியவரும்.