ரஜினி - கமல் படத்தில் இந்த நடிகையா! யாரும் எதிர்பார்க்காத ஒருவர்
Kamal Haasan
Rajinikanth
Priyanka Arul Mohan
By Kathick
KH x RK
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் - கமல் ஹாசன் பல ஆண்டுகளுக்கு பின் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்திற்கு தற்போது KH x RK தலைப்பு உள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
சமீபத்தில் இப்படத்தின் புரோமோ வீடியோ வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், படத்தின் படப்பிடிப்பு இன்னும் பல மாதங்களுக்கு பின்தான் தொடங்கும்.

பிரியங்கா மோகன்
இந்த நிலையில், இப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல. நடிகை பிரியங்கா மோகன் இதற்கு முன் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
