இரண்டாவது படத்திற்கு லட்சக்கணக்கில் கொட்டி கொடுத்த சன் பிச்சர்ஸ்.. பிரியங்கா மோகன் காட்டில் மழை
actress
salary
sun pictures
priyanka mohan
By Karthick Raja
சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 10ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். டாக்டர் படத்தை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள இளம் நடிகை பிரியங்கா மோகன்.
இந்நிலையில், இப்படத்திற்காக நடிகை பிரியங்கா மோகனுக்கு ரூ. 50 லட்சத்தை சம்பளமாக சன் பிச்சர்ஸ் கொட்டி கொடுத்துள்ளது. இரண்டாவது படத்திற்கே நடிகை பிரியங்காவிற்கு இவ்வளவு சம்பளமா என இப்போது, சில நடிகைகளுக்கு வயிறு எரிய துவங்கிவிட்டதாம்.