தலைக்கனம் இல்லாமல் நடந்து கொண்ட தளபதி! உண்மையை உடைத்த டான் நடிகை..
முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் கடந்த மாதம் ஏப்ரல் 13 ஆம் தேதி தியேட்டரில் வெளியான படம் பீஸ்ட். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என பலர் கூறி வருகிறார்கள்.
அப்படத்திற்கு பிறகு விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் பற்றிய சில அனுபவங்களை நடிகை பிரியங்கா மோகன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
விஜய் சார் என்னுடைய படங்களை பார்த்துவிட்டு பாராட்டியதாகவும் எங்கள் படங்களை பார்ப்பீர்களா சார் என்று கேட்டேன். டாக்டர் படமும் சரி நீங்கள் நடித்த மற்ற படங்களையும் நான் பார்த்தேன் என்று கூறி ஆச்சரியப்பட்டுள்ளார் பிரியங்கா மோகன்.
மேலும் மற்ற நட்சத்திரங்களின் படங்களையும் நான் பார்ப்பதாகவும் தளபதி விஜய் கூறியுள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் தலைக்கனம் இல்லாமல் வளரும் கலைஞர்களையும் பாராட்டுபவர் விஜய் என்று கூறி வருகிறார்கள்.