பிறந்து 100 நாட்களாக சிகிச்சைக்காக ICU-வில் இருந்த குழந்தை! பிரியங்கா வெளியிட்ட மகளின் புகைப்படம்..

International Women's Day Priyanka Chopra
By Edward May 09, 2022 10:00 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமாகி பாலிவுட் படங்களில் நடித்து மிகப்பெரிய உச்சத்தை தொட்டு வருகிறார் பிரியங்கா.

அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக ஹாலிவுட் வரை சென்று பிரபலமானார். சில ஆண்டுகளுக்கு முன் குறைந்த வயதுடைய அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடித்து வரும் பிரியங்கா சமீபத்தில் வாடகைத்தாய் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை உடலில் சில பிரச்சனைகள் இருந்ததால் 100 நாட்ககளுகும் நேலாக மருத்துவமனையில் NICU- சிகிச்சை பெற்று தற்போது பிரியங்கா நிக்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Rady Children’s La Jolla and Cedar Sinai, Los Angeles சார்ந்த மருத்துவர்கள் செவிலியர்களுக்கு எங்களின் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். ஏனென்றால் எங்கள் மகள் பெரிய கெட்டதை சந்தித்துள்ளார்.

தற்போது நாங்கள் புதிய வாழ்க்கையை என் மகளுடன் தொடங்கவுள்ளோம் என்று அன்னையர் தினத்தன்று புகைப்படத்தோடு பதிவினை போட்டுள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.