புஷ்பா படத்தில் சமந்தா நடனமாடியது அவரின் அந்த குணத்தை காட்டுகிறது - நடிகை பிரியாமணி..

Samantha priyamani
By Jeeva Feb 01, 2022 07:06 AM GMT
Report

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் மூலம் அறிமுகமாகி அப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றவர் பிரியாமணி.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிரபலமான நடிகையாக உள்ள பிரியாமணி நடிப்பில் சமீபத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் - 2 தொடரில் அவரின் கதாபாத்திரம் பெரியளவில் பேசப்பட்டது.

இதனிடையே அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் புஷ்பா படத்தில் சமந்தாவின் நடனம் குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது "தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளியாகி வருகின்றன. நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட நடிகைகள் ஒட்டுமொத்த படத்தையும் தங்களின் தோள்களில் சுமந்துவருகின்றனர்.

நடிகை நயன்தாரா நெற்றிக்கண் போன்ற சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் போக்கு மாறி வருகிறது.

நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. புஷ்பா படத்தில் சமந்தாவின் கவர்ச்சி நடனம் ஆடியது அவரது தைரியமான முடிவு. அவர் மிகவும் நன்றாக செய்திருந்தார்" என தெரிவித்துள்ளார்.