ரெட்கார்டு உடைத்தும் ஒர்க்கவுட் ஆகாத வடிவேலு! டாட்டா காட்டிய நடிகர்கள்..

Tamil Cinema Vadivelu
By Edward Apr 23, 2022 09:30 AM GMT
Report

தன்னுடைய நகைச்சுவை திறனால் மக்களை ஈர்த்து வரும் கலைஞர் என்றால் அது வைகைபுயல் வடிவேலு தான். அப்படியொரு பார்மில் இருந்த வடிவேலு சில வருடங்களாக ரெட் கார்ட் கொடுத்து சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

அதையெல்லாம் உதறி மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார்ர். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து எடுத்த புகைப்படங்கள் வைரலானது.

இந்நிலையில் வடிவேலு என்றாலே அவருடன் சக நடிகர்கள் பல எப்படியாவது அவருடன் சில காட்சிகளிலாவது நடித்துவிடுவார்கள். அதில், சிங்கமுத்து, மரனமடைந்த அல்வா வாசு, சிசர் மனோகர், அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம் புகழ் நடிகர் என அவருடன் ஜோடி சேர்ந்த நடிகர்கள் தற்போது வடிவேலுவுடன் இல்லை.

அந்த டீம் தான் வடிவேலும் பக்கபலமான அமைந்து வந்தது என கூற முடியும். அப்படியிருக்கையில் அந்த டூம் இப்போது வடிவேலுவுடன் இல்லை. அவர்களுக்கு பதில் ரெடின் கிங்க்ஸ்லி, ராமர் உள்ளிட்ட சிலர் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் ஒட்டாத நிலையில் வடிவேலு திணறி வருவதாக கூறப்படுகிறது.