தயாரிப்பாளரை புலம்ப விடும் விக்னேஷ் சிவன்! நயன் தாராவை கூடயே வெச்சுட்டு இப்படியா?

Nayanthara Samantha
By Edward Apr 21, 2022 02:15 AM GMT
Report

சினிமாவை பொறுத்தவரையில் ஒரு படம் முடிந்தப்பின் திட்டமிட்ட தேதியில் வெளியாகாமல் தள்ளிச்சென்றால் அது தயாரிப்பாளருக்கு கொடுக்கும் பிரச்சனை இரு மடங்காக அதிகரிக்கும். அப்படியொரு சூழலில் மாட்டி இருக்கிறார் மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித்குமார்.

தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன் தாரா, சமந்தா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படத்தினை லலித்குமார் நயன் தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் டீசர், அனிருத்தின் 4 பாடல்கள் என மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 28ல் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் படம் ரிலீசாக இன்னும் ஒருசில நாட்கள் இருக்கையில் விக்னேஷ் சிவன் கிடைக்கும் நேரத்தில் படத்தினை ரீ - எடிட் செய்து வருகிறாராம்.

இப்படி எடிட்டிங் சரியாக முடிக்காமல் விக்னேஷ் சிவன் இப்படி இருக்காரே என்று லலித்குமார் பதற்றத்தில் இருக்கிறாராம். ஏற்கனவே சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் சறுக்கியது தான் லலித்குமாருக்கு கொஞ்சம் புலம்புவதற்கு காரணமாக இருக்கிறதாம்.

அதுவும் இன்னும் ஒரே ஒரு வாரத்தில் என்ன செய்யப்போகிறார்கள் சரியான தேதியில் படம் வெளியாகுமா என்ற கேள்வியிலும் தயாரிப்பாளர் லலித்குமார் இருந்து வருகிறார்.