தனுஷ் படம்னு சொல்லிட்டு தயாரிப்பாளர் அப்படி பண்ணாரு!! ஷாக் கொடுத்த நடிகை நமீதா..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை நமீதா. 2004ல் கேப்டன் விஜயகாந்த நடிப்பில் வெளியான எங்கள் அண்ணன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகினார். அப்படத்தினை தொடர்ந்து ஏய் படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாகவும், இங்கிலீஷ்காரன் சத்யராஜுக்கு ஜோடியாக நடித்தும் நான் அவன் இல்லை படத்தின் நடிகர் ஜூவனுக்கு ஜோடியாகவும் நடித்தார்.
தற்போது குணச்சித்திர நடிகர்களாக திகழ்ந்து வரும் சத்யராஜ், சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து வந்தார். இடையில் படவாய்ப்பில்லாமல் காணாமல் போன நமீதா உடல் எடையை ஏற்றியதால் கவர்ச்சி பக்கமும் சென்றார் நமீதா. அப்படி தான் அஜித்துடன் பில்லா, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் படங்களுக்கு பின் எந்த வாய்ப்பை பெறாமல் காணாமல் போனார். பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று பின் திருமணம் செய்து இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார்.
மீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தான் மறக்கமுடியாத மோசமான அனுபவத்தை பற்றி நமீதா பகிர்ந்துள்ளார். ஒரு படம் 2006 பண்ணினேன். அந்த படத்தின் பெயர் சொல்லமாட்டேன். அந்த தயாரிப்பாளருக்கு முதல் படமாக இருந்தது. என்னிடம் அவர், உங்களுக்கு ஆப்போசிட்டாக நடிகர் தனுஷ் நடிக்க போகிறார் என்று சொல்லி படத்தில் ஒப்பந்தம் செய்தார். ஆனால், அந்த படத்தில் தனுஷ் நடிக்காமல் அவரின் சொந்தக்கார பையன் தான் நடித்தார்.
அதன்பின் பாதி படம் விட்டு சென்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்தேன் என்று நமீதா ஓப்பனாக பேசியிருக்கிறார். மலையாள மொழியில் பெரிய தயாரிப்பாளருக்காக அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் வந்தப்பின் அந்த படத்தில் வேறொரு தயாரிப்பாளரும் வேறொரு இரு இயக்குனரும் வந்துட்டாங்க.
என் வாழ்க்கையில் 2, 3 படங்கள் இருக்கு, என் வாழ்க்கையில் அதை மறக்கமாட்டேன். இந்த படத்தை பார்த்த பத்திரிக்கையாளர் என்னை அப்படி ஒரு வார்த்தையில் விமர்சித்தார் என்று நமீதா கூறியிருக்கிறார்.