விஜய் வீசிய வலையில் சிக்காத முக்கிய புள்ளி.. தலைதெறிக்க ஓடிய சம்பவம்

Vijay
By Kathick Apr 12, 2024 03:30 PM GMT
Kathick

Kathick

Report

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது Goat படம் உருவாகி வருகிறது என்பதை நாம் அறிவோம்.

இது ஒரு பக்கம் இருந்தாலும், அவருடைய கடைசி படம் எப்படி இருக்க போகிறது என்பதை பற்றி இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. ஹெச். வினோத் இப்படத்தை இயக்கப்போகிறார் என உறுதியாக சொல்லப்படும் நிலையில், இப்படத்தை தயாரிக்கவிருந்த DVV Entertainment திடீரென இப்படத்திலிருந்து பின் வாங்கியுள்ளது.

விஜய் வீசிய வலையில் சிக்காத முக்கிய புள்ளி.. தலைதெறிக்க ஓடிய சம்பவம் | Producer Out From Vijay Last Movie

என்னடா இது திடீர்னு இவ்வளவு பெரிய நடிகரை தயாரிக்காமல் இந்த நிறுவனம் தலைதெறிக்க ஓடிவிட்டதே என்ன காரணம் என்பதே ரசிகர்கள் மத்தியில் பேச்சாக எழுந்துள்ளது.

இப்படியொரு நிலையில் தன்னுடைய கடைசி படத்தை தானே தயாரிக்க முடிவு செய்துவிட்டாராம் நடிகர் விஜய். ஆம், தனது கடைசி படமான தளபதி 69 படத்தை, தன்னுடைய தயாரிப்பில் எடுக்க முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பு நாடாளுமன்ற தேர்தல் முடித்தவுடன் வெளிவரும் என கூறப்படுகிறது.